எண்ணம்
(Eluthu Ennam)
பரணியால் புகழ்ந்தோரும் தலை குனிந்தே மடிந்தோரும் சமத்துவம் பெறும்... (Gnanaprakash)
03-Jul-2019 11:38 am
பரணியால் புகழ்ந்தோரும்
தலை குனிந்தே மடிந்தோரும்
சமத்துவம் பெறும்
கூற்றுவன் இசை இது
ஆயிரம் இசைக்கருவி
ஒலிசெய்து ஓய்ந்தாலும்
ஆவி ஓய்ந்தபின்பும் ஒலிசெய்யும்
ஆதி இசை பறை
முன்யென்மம் முடிக்கையிலே -காதில்
முணுமுணுத்த ஓசை இது
எவர் இதயம் இறந்தபின்பும்
அழுகின்ற இதயம் இது
இருதய இசைக்கருவி
இசைக்கும் வரை மனித ஆட்டம்
இதை உரக்க சொல்லும்
அதிர்வு இது
ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி
பாறையாய் மாறிவிட்ட
சாதிய மனங்கள் எல்லாம்
சாம்பலாய் ஆகட்டும்
இந்த பறை ஒலியினிலே
இசையோடு வாழ்ந்து வரும்
எம்தமிழர் பரம்பரையில்
கிராமிய கலையென்று
கடைத்தெருவில் ஒதுக்கிவிட்டோம்
எம் தமிழ் கலைஞர்களை
நகருமா மனிதம்
மனிதனை தேடி ????