வன்முறை

நிகழ்—டி
ஏற்றும்
ஏ.கே.47 துப்பாக்கியிலிருந்து-ஒரு
தோட்டா – நம்
உறக்கத்திற்கு!

ஒரு தோட்டா
கிழக்கின் மார்புக்கு!

ஓ!
குருதி கொட்டியபடி
விடியல்!

சமூக மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும்
கல்விக் கூடமே
புரட்சிப்படையின் பாசறை ஆகும்
இனிமேல் தான்
கலைமகள் விழா என்றால்
ஆயுத பூஜை என்பது அர்த்தமாகும்


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:32 am)
பார்வை : 80


மேலே