காட்சி இன்பம்
குன்றின்மீது நின்று கண்டேன்
கோலம்! என்ன கோலமே!
பொன் ததும்பும் 'அந்திவானம்'
போதந் தந்த தேடி தோழி!
முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வர்; அஃது
குறுகும் கொள்கை அன்றோ தோழி!
கண்ணும் நெஞ்சும் கவருகின்ற
கடலை, வானைக், கவிஞர் அந்நாள்
வண்ண மயில்வே லோன்என் றார்கள்.
வந்ததே போர்இந்-நாள்-தோழி!
எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ!
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில் வெற்பும் நன்-றே-தோ-ழி!
பண்ண வேண்டும் பூசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ண வேண்டும் சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண்-டார்-தோ-ழி
அன்பு வேண்டும் அஃது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
வன்பு கொண்டோர் வடிவு காட்டி
வணங்க என்று சொல்-வார்-தோ-ழி!
என்பும் தோலும் வாடு கின்றார்
'ஏழை' என்ப தெண்ணார் அன்றே!
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ-ழி-வா-ழி!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
