இதயத்தை இழந்தால்

போகும் கேமிரா
முதுகில் சவாரி செய்தால்
ஒரு பிறை சிரிக்கும்!
ஒரு பிஞ்சு கொஞ்சும்!
ஒரு துண்டுச் சுவர்க்கம்
உங்கள் கண்களுக்குள்!

எப்போது
தெண்டுல்கர் களத்தில் இறங்குவார்?
அப்போது அவர் மட்டையில்
பந்தாய் அடிபட ஆசை
சூரியனுக்கும்!

மனோஜ் பிரபாகர்
எப்போது வருவார்
அப்போது அவர் கையில் - ஒரு
பந்தாய்ச் சுழல பூமிக்கும் ஆசை!

இந்திய பாகிஸ்தான்
என்றால் சார்ஜா திடலுக்கே
இதயத் துடிப்பு ஏறிவிடுகிறது!

சார்ஜாவில்
இதயத்தை இழந்தவர்க்கு
இன்னிங்ஸ் வெற்றி
விளையாட்டில் அல்ல!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:08 pm)
பார்வை : 27


மேலே