நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்

தவறுகள் செய்வது
தவறில்லை!
சரியானதற்குச் சமமானது
திருத்திக் கொள்ளத் தக்க
தவறு!

சரிகளின் கர்ப்பங்கள்
தவறுகள்!

தாமதமாகும் வெற்றிக்குத்
தோல்வி என்றா பெயர்?

அடித்தல் திருத்தல்களால்
காயப்படுவதில்லை காவியங்கள்!

பிசிறுகள் மடியில்
இராகப் பரிசுகள் கிடைக்கலாம்!

கிறுக்கல்களிலிருந்து
இரவிவர்மாக்கள் பிறக்கலாம்!

தட்டிவிட்ட கல்லே
நாளை
வெற்றிக் கல்வெட்டாய் நிற்கலாம்!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:27 pm)
பார்வை : 15


மேலே