அமுதும் தேனும்

அமுதும் தேனும் எதற்கு – நீ
அருகினில் இருக்கையிலே – எனக்கு

அருவி தரும் குளிர்நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே – நான்
கொய்யும் கொய்யாக் கனியே – வான்

விழியாலே காதல் கதைபேசு – மலர்க்
கையாலே சந்தனம் பூசு – தமிழ்
மொழி போல சுவையூட்டும் செந்தேனே
உடல் நான், உயிர் நீ தானே – வான்


கவிஞர் : சுரதா(9-Mar-12, 6:13 pm)
பார்வை : 231


மேலே