தோழி

நீ அதிர்ச்சியடையக்
கூடிய
சொல்லொன்றைச்
சுமந்து நிற்கிறேன்

சிறு திருட்டுகள்
செய்யப் பழகிய
வீட்டுப் பிராணியொன்றை
சாக்குப் பையிலிட்டு
மூடி
எங்கேனும்
கண் காணா இடத்தில்
விட்டு வருவது போல
சுமந்து செல்கிறேன்

வார்த்தைகள்
வளர்த்தெடுக்கும் முன்
முத்தமிட்டு
உன் இதழ் பூட்டத்
துணிகிறேன்
அதிர்ச்சியுறும்
ஆதிச் சொல்லொன்றை
நீ சொல்கிறாய்

வாசலில்
வளர்ப்பு மிருகம்
வாலாட்டியபடி...


கவிஞர் : கலாப்ரியா(14-Jun-12, 2:38 pm)
பார்வை : 18


மேலே