வான மகள்!!

அந்தி வானம் எங்கும்
ஆவாரம் பூ பூத்ததுபோல
அத்தனை மஞ்சள்!

மாலை முடிந்துவிட்ட பின்னும்
மஞ்சள் வெயிலா?
இன்று கதிர் திருப்ப நாள்
கூட இல்லையே,
பின் எப்படி?
வினவினேன் வானத்திடம்.

நேற்று
தன் செல்ல மகள்
கல்லூரிக்கு
அவசரமாய் செல்கையில்
அணிய மறந்து விட்ட
தங்க நகைக்கு மாற்றாக
ஒரு நகை செய்ய,

காலையில் பற்ற வைத்த - இந்த
கொல்லர் பட்டறை
இன்னும் அணைக்கபடவில்லை
என்றது வானம்
நகை முடிந்த மகிழ்ச்சியில்
அவசரமாய் உலையை அணைத்தபடி!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:59 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே