தோத்திரப் பாடல்கள் கண்ணன் வரவு

வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
வருவாய், வருவாய், வருவாய்.

சரணங்ள்

உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்) 1

இணைவாய் எனதா வியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்) 2

எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்)

3


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:28 am)
பார்வை : 0


மேலே