வாழும் வரை போராடு

வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஓ..

(வாழும்..)



மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு

ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே

(வாழும்..)



ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்

எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே

(வாழும்..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:35 pm)
பார்வை : 0


மேலே