தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
தகிட ததிமி தகிட
தகிட ததிமி தகிட
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
(தகிட..)
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
ஆ...
(தகிட..)
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
(தகிட..)