காடு திறந்தே

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது[௨]

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ



நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனி துளி நான்

சூரியனே என்னை குடித்துவிடு

உகம் உகாமாய் நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே

உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ



சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து முபணி காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே சகியே சுகியே

நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ



காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராளியோ

ஒ ஓ


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 3:28 pm)
பார்வை : 0


மேலே