தமிழர் திருநாளில் தமிழர்

தமிழர் திருநாள்!
உயர் தமிழர் திருநாள்!
உடன் பிறப்பெ!
என்ன செய்கிறீர்கள்?
இல்லம் பதுங்காதீர்!
ஒய்வு எடுக்காதீர்!

தமிழ் ஆண்டை சித்திரைக்கு
மாற்றி விட்டார்களா?
வருந்தாதே உடன் பிறப்பே!
மீண்டும் தமிழ் ஆண்டு
தையில் மலரும்.

தை தமிழ்ஆண்டு பிறப்பாக்க
ஆடு மாடுகளுக்கு அலங்காரம்
செய்து உங்களுக்கு நாங்கள்
சளைத்தவர்களல்ல என
எட்டு திக்கும் முழங்குவோம்.

கேடுகளைந்து செம்தமிழர்
மறைந்தொழிந்து நாம் மட்டும்
பீடு நடை போடுவதற்கு

தமிழனை மறப்போம்!
தமிழக உரிமையை இழப்போம்!
தமிழக உரிமைகளை பறித்தவர்களை
மன்னிப்போம். அவர்களுடன்
கூடிக்குலாவி உயர் தமிழர் திரு நாளை
கொண்டாடுவோம்.

உடன்பிறப்பே!
தமிழை தமிழனை மறந்திடுங்கள்
வாழ்க! நம்தமிழ்பற்று.! வளர்க!
உயர்தமிழன் என்று வாய் மணக்க
எம்மை வாழ்த்துங்கள்.


கவிஞர் : கருணாநிதி(3-Feb-12, 2:52 pm)
பார்வை : 37


பிரபல கவிஞர்கள்

மேலே