இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ எந்திரன்

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகுல்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
ஐரோபோ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?
என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

கட்டிக்கொள்ளும் போதும்
தொட்டுப்பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில்... நடுவில்...
பேட்டரிதான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
ஷட்டௌனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சர் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்
எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா?
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா?
உயிரியல் மொழிகளில்
எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில்
இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

முட்டாதே ஓரம்போ - நீ
காலைச் சுத்தும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
தேவையில்லை போ போ


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:08 pm)
பார்வை : 0


மேலே