வானம் புதிது இளமை இதோ இதோ

வானம் புதிது
வாசங்கள் புதிது
வாழ்க்கை வரையும்
வண்ணங்கள் புதிது

சாலை புதிது
சாரல்கள் புதிது
இதயம் உறையும்
சப்தங்கள் புதிது

கடவுள் உணரும் தருணம் புதிது
அடிக்கடி நேரும் மரணம் புதிது

மௌனம் கொள்ளும் நீளம் என்ன
பார்வை செல்லும் ஆழம் என்ன

உண்மை சொல்லவா - மெல்ல
உள்ளம் சொல்லவா?

தன்னந் தனிப்படத்
தவித்ததும் துடித்ததும்

எண்ணக் கிறுக்கலை
இருட்டிடம் படித்ததும்

ஒற்றைப் படுக்கையில்
உனக்கிடம் பிடித்ததும்

எந்தன் தலையணை
உனக்கிணை நடித்ததும்

எந்தன் கண்ணிமைகள் பாரமுற
உன் நினைவு தூற வர
ஓர விழி ஈரமுற நேரும் போது...

அன்று கண்ட கானல் எல்லை
இன்று கண்ணில் காணவில்லை

காதல் கொண்டதால் - கொஞ்சம்
காமம் கொண்டதால்

உந்தன் விரல் படக்
குரல்வளை அடைத்தது

எந்தன் பரம்பரை
வரம்புகள் உடைத்தது

உன்னை நெருங்கிட
நரம்புகள் புடைத்தது

ஏதோ இடித்ததை
விபத்தெனத் துடைத்தது

இந்தப் பாதை தடம் மாறியது
போதை தலைக்கேறியது
நீயிருக்கும் தூரம் அது தீரும் போது


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:05 pm)
பார்வை : 0


மேலே