ஹோலா அமிகோ இளமை இதோ இதோ

நாலு சுவரும்
நாப்பது பெஞ்சும்
எல்லாம் தெரிஞ்ச
ஏழு பெருசும்
class room ஆனது எப்போது?

வரட்டி வடையும்
ரப்பர் தோசையும்
ஆட்டம் ஆடும்
கிழட்டு ஸ்டூலும்
canteen ஆனது எப்போது?

அடுக்கி வைத்த
ஆயிரம் குப்பைகள்
library ஆனது எப்போது?

பொட்டல் காடும்
பத்தே புல்லும்
campus ஆனது எப்போது?

நீயும் நானும் நீயும் நானும்
நீயும் நானும் நீயும் நானும்
Hola Hola Hola சொன்னோம்
அப்போது

Hola Amigo.... Hola Amigo
Bailar Conmigo.... Nos Partido....

மயக்கம் ஊட்டும்
professor குரலில்
தூக்கம் சொல்லும் Hola!

மதிய நேரம்
திரையில் கோடம்
பாக்கம் சொல்லும் Hola!

Tattoo போட்ட
Fundu கூட்டம்
Fashion சொல்லும் Hola!

Bottle போட்ட
பண்டுக் கூட்டம்
Tension சொல்லும் Hola!

Motor Bikeஇல் Harry Potter... Hola Amigo
Corridorஇல் Mary Peter... Hola Amigo
Exam Hallஇல் Thermometer... Hola Amigo

Arrearஇல் ஞானம் சொல்லும்

Hola Amigo.... Hola Amigo
Bailar Conmigo.... Nos Partido....

கண்ணில் தோன்றும்
Rainbow மீன்கள்
இளமை சொல்லும் Hola!

Weekend விரதம்
முடிக்கும் திங்கட்
கிழமை சொல்லும் Hola!

வெட்கம் ஒளியும்
வளையல் ஒலியில்
கவிதை சொல்லும் Hola!

வோட்கா வழியும்
கிளிகள் விழியில்
போதை சொல்லும் Hola!

துப்பட்டாக்கள் தொட்டுச் சொல்லும்... Hola Amigo
பட்டாம்பூச்சி கூட்டம் சொல்லும்... Hola Amigo
ஆக்ஸிட்டோசின் ஆட்டம் போடும்.... Hola Amigo

முதன் முதல்... காதல் சொல்லும்
Hola Amigo.... Hola Amigo
Bailar Conmigo.... Nos Partido....


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:03 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே