குலுக்கி குலுக்கி இளமை இதோ இதோ

குலுக்கி குலுக்கி குலுக்கிப் போனாய்
கையைக் குலுக்கிப் போனாய்

உலுக்கி உலுக்கி உலுக்கிப் போனாய்
உயிரை உலுக்கிப் போனாய்

உச்சரிக்கவா?
உன் பேரை
காதலி என்று

எச்சரிக்கவா?
என் நெஞ்சை
காதல் என்று

அறிமுகமானதும்
நிமிடம் முப்பதில்
நிலைமை இதானா?

அறிகுறி சொல்லுது
உளறித் தள்ளுது
இளமை இதானா?

பூம் பூம் என்றது இதயம்
கண்கள் கண்டதும்
பூம் பூம் என்றது இதயம்
காதல் கொண்டதும்

நிலவென தரை விழும் உன் நிழலை
நிழற்படம் எடுத்ததை அறிவாயா?

வில்லையில் பார்த்திடும் வேளையிலே
உனக்கென சிரித்ததை அறிவாயா?

நீ
விட்டுப்போனதை அறிவாயா
ஒட்டிக்கொண்டதை அறிவாயா
கையின் வாசம் என்னோடு
இங்கே...

நான்
விட்டுப்போனதை அறிவாயா
ஒட்டிக்கொண்டதை அறிவாயா
ஆயுள் ரேகை உன்னோடு
அங்கே...

பூம் பூம் என்றது இதயம்
கண்கள் கண்டதும்
பூம் பூம் என்றது இதயம்
காதல் கொண்டதும்

ஒரு தினக் கனவினில் உன்னோடு
வாழ்ந்திட அனுமதி தருவாயா?

சில யுகப் பொழுதுகள் என்னோடு
நிஜமென வாழ்ந்திட வருவாயா?

நான்
தொட்டுப் பார்த்திட விடுவாயா?
முத்தம் வைத்திட விடுவாயா?
உன்னை உன்னை என்னுள்ளே
இங்கே...

நீ
ஒட்டுக் கேட்டிட வருவாயா?
எட்டிப் பார்த்திட வருவாயா?
நீயும் நானும் என்னுள்ளே
இங்கே...

பூம் பூம் என்றது இதயம்
கண்கள் கண்டதும்
பூம் பூம் என்றது இதயம்
காதல் கொண்டதும்


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 11:58 am)
பார்வை : 0


மேலே