நீ கோரினால் 180

நீ கோரினால்
வானம் மாறாதா! - தினம்
தீராமலே
மேகம் தூறாதா!

தீயே இன்றியே - நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!

கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.

போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:21 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே