பேசுகிறேன் பேசுகிறேன்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா....
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
