சில ஆண்களின்

சில ஆண்களின்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள்முதுகில் ஊரும்

சிலர்
கோப்புகளை வாங்கும்போது
அவர்களின்
விரல்களையும் விசாரிப்பார்கள்
இத்தனை சூறாவளிக்கு
மத்தியில்தான்
அந்தக் குத்துவிளக்குகள்
வெளியில் எரிந்துவிட்டு
வீடு வருகின்றன

அவர்களின் கதவுகளைத்
திறந்து விட்டோம்
தெருவுக்குள் வந்தார்கள்
தீ !


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 4:10 pm)
பார்வை : 89


மேலே