இயற்கை

இந்த
நீள
நீலக் கரும்பலகையில்
எழுதும்
இவை
மௌன பாஷையின்
லிபிகளோ?

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியக் காவியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில் . . .
எவனவன்
இத்தனை முற்றுப் புள்ளிகள்
இட்டு வைத்தவன்?


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 4:11 pm)
பார்வை : 125


மேலே