சாக்கோட்டை

சுடலை நோக்கிய
என் வழித்தடத்தில்
செங்கொன்றையாய் நேசம்
பூத்துச் சொரியும்
சாக்கோட்டைக்கு
இன்னும் சில
அடியீடு மட்டும்
வாழும் ஆசையோ
வானினும் உயர்ந்தன்று
எனினும் இனித் திரும்ப ஒண்ணாது
அலை ஓயவும் மாட்டாது.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:45 pm)
பார்வை : 0


மேலே