விரகம்

மழைக்கு இருட்டி வரும் மதியம்
நகரப் பேருந்து நெரிசலில்
உடல் புழுங்கி வியர்க்கிறது
வானொலியில் கனிந்தொழுகும்
விரக ரசம்
நாநீட்டிப் பருகும் இருசனம்
கனவின் மாங்கனி
பசியாற்றாது
விரகம் என்பதோர்
வியாபாரம்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:46 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே