அம்ம அஞ்சுவேன் யான்

நீள் இரவை அஞ்சுவேன் யான்

பழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி

பறித்து

அடர் மெளனம் திணிக்கும்

இரவை அஞ்சுவேன் யான்

நோய் பெருக்கி

குளிர், தனிமை, விரகம்

என வாட்டும்

கருநீல இரவை அஞ்சுவேன் யான்

வல்லரவின் விடம் என

நெஞ்சில் பகை வளர்க்கும்

கொடுங்காற்றுக் கொடியென

சிந்தை அலைக்கழிக்கும்

இரவை அஞ்சுவேன் யான்

அம்ம, இரவை அஞ்சுவேன் யான்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:08 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே