தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கைமீது கிடக்கப் பிடிக்கும்
பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக்கோடையில் நீட்டிக் கிடக்க
வேப்பமரத்துக் கட்டில் பிடிக்கும்
நண்பர்கள் என்னைச் சுற்றியிருந்தால்
நரகம்கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
இந்த நிமிஷம் எனக்குப் பிடிக்கும்