நம் சமூகம்

நம் சமூகம்
கண்கள் அறியாக்
கம்பிகொண்ட சிறைச்சாலை
வீடுதாண்டி விடுதலை இல்லை
பெண்டிர்க்கு
மனம் தாண்டி விடுதலை இல்லை
மனிதர்க்கு
மடம் தாண்டி விடுதலை இல்லை
துறவியர்க்கு
வா !
நீயும் நானுமேனும்
விடுதலை பெறுவோம்
அடிமைத்தளை வேண்டாம்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:37 pm)
பார்வை : 0


மேலே