மனிதப் பிறவி

இனியும் எழுதிக் கடத்தலாம்
ஏமாற்றம் கனிந்து ஒழுகும் இறுதி நாட்களை!
வாழ்நாள் விற்று இலக்கியம் வாங்கி
வாய்மொழி வீசி வெஞ்சனம் தேடி
நசுங்கிய மனையின் கைவளை அடகில்
மருத்துவம் வாங்கினேன்!
வெற்றுப் புகழ்மொழி அன்றி
ஐந்தொகைப் பேரேட்டில்
அதிகம் ஒன்றில்லை!
சதத் ஹசன் மண்டோவும்
ஜி.யு. போப்பும் போல்
எதைப் பொறிக்கச் சொல்ல
கல்லறையில்?
பாழாய் போனதொரு
மனிதப் பிறவி!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 5:13 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே