வேடிக்கை

நீ உன் சொற்களை
என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்

மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்

என்னிடமும் சொற்கள் இருந்தன

அவர்களிடமும் சொற்கள் இருந்தன
அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன


கவிஞர் : லீனா மணிமேகலை(2-May-14, 5:54 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே