பார்த்தல்

கூடைக்காரி
சிலசமயம்
குடும்பக்காரி
வரும் தெருவில்
டீச்சர் வந்தாள் குடைவிரித்து.
…… ஒற்றைமாட்டு வண்டியிலே
…… வைக்கோல் பாய்க்கு
…… நெளிந்து தரும்
…… மருத்துவச்சி தேடுகிறாள்
…… எட்டிப் பார்த்து ஒரு வீட்டை
விளக்குக் கம்பம்
நடைக் கொம்பாய்
நிற்கும் தெருவில்
பிறபெண்கள்
வந்தார் போனார் அவள் வரலே.


  • கவிஞர் : ஞானக்கூத்தன்
  • நாள் : 9-Sep-14, 3:21 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே