மெசியாவின் காயங்கள் - கலை

நிமிரும்
இறந்த காலம்.
மறைக்க
மறந்துபோன
மலைக்குள்ளிருக்கும்
மனம் வார்த்த
சிற்பம்.

இருந்தும்
கணுக்கணுவாக
முறிந்த கணம்
வேதனையில்
விழுந்தும்
கல்லின் குரல்
கணத்தில் தொனிக்கும்
போதெல்லாம்
ஒரு ஜனனம்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:20 am)
பார்வை : 122


மேலே