சாகாத வானம் நாம்

சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்;


கவிஞர் : மீரா (கவிஞர்)(2-Nov-11, 5:38 pm)
பார்வை : 205


மேலே