மன்னிக்க வேண்டுகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன் ......

தித்திக்கும் இதழ் உனக்கு , என்றென்றும் அது எனக்கு
நம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன?
கண்ணோடு உண்டானது , நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி , என் தோளில், நின்றாடும் இந்நாளில்

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையை தருக
முதுமை வந்த பொழுதும் , இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க , இன்பம் நாளுக்கு நாள் வளரும்

முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊசலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
மலர்கள் ஒன்று சேரும் , மலையாக மாறும்
நெஞ்சினிக்க , நினைவினிக்க , கண்கள் நூறு கதை கூறும்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:40 pm)
பார்வை : 112


மேலே