உன்னை மறந்து விட்டேன்...

அன்று.....

கண்களால் உன்னை காதலித்தேன்....
நீ கண்டுகொள்ளவில்லை....

வார்த்தைகளால் வர்ணித்தேன்....
வசைபாடி கத்தி போனாய் ...

கடிதத்தால் காதல் சொன்னேன்...
கண்டபடி திட்டி சென்றாய்...

மண்டியிட்டேன்!
மறுத்துவிட்டாய்...

நீ மாற்றானுக்கு மாலையிட்டாய்...
உன்னை மறந்து விட்டேன்...

இன்று....

மீண்டும் உன்னை நினைக்கிறேன்...
ஏன்!
என் முன்னால் மண்டியிட்டு ஒருத்தி...

மறுக்கவில்லை நான்!
மாலையிட்டேன் அவளுக்கு...
உன்னை மீண்டும் மறப்பதற்கு!



எழுதியவர் : சரவணன் (2-Nov-10, 10:40 am)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 966

மேலே