நாணய தட்டுப்பாடு
ஐம்பது பைசா நாணய தயாரிப்பு
நின்ற போது வருந்தியவன்
ஒரு ரூபாய் நாணயத்
தட்டுப்பாட்டில் துவண்டே போனான்.
எல்லாவற்றுக்கும் தாராளம் காட்டும்
மக்கள் அவனுக்கு இரண்டு
ரூபாய் தரத் தயங்கினர்.
இன்னமும் திறந்த வெளிகளையே
கழிப்பிடங்களாக்கும் நவீன இந்தியாவில்
கட்டண கழிப்பிட உரிமையாளனுக்கு விடிவேது?