மலரின் பங்கம்

கடவுளுக்கு
மலர்களை உதிர்த்து
அர்ச்சனை செய்பவனிடமும்

திருமணத்தில் மலர்களை உதிர்த்து
ஆசி புரிபவனிடமும்

மரண ஊர்வலத்தில்
மலர்களை உதிர்த்து
சாலையை நிரப்புபவனிடமும்

மன்றாடிக் கேட்டுக்கொண்டன
மலர்கள்....

"எங்களை உரித்து
சிதைத்து பங்கம் செய்யாமல்
இயற்கையாய் மரணிக்கவிடுங்கள்
மானுடமே" என்று!

-----வெண்ணிலா------

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 10:56 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 109

மேலே