உழவின்றி உலகில்லை (பொங்கல் விழா போட்டிக்கவிதை)
மழை இல்லாமல்
வயலுக்கு பாய்ச்ச தண்ணீர் இல்லை...
அதனால் உழவனான என்னிடம்
கண்ணீர் அணைக்கட்டு
நிரம்பி இருக்கிறது..
பச்சை பட்டு சேலையில்
மஞ்சள் வர்ணம் பூசியது போல
என் வயலில் நெல் மணிகள்
விளைந்து குவிந்த காலம்போய்,
இப்போது,
அந்நிய நாட்டான்
பார்த்த ஒரு பார்வையாலும்,
என் குடும்பத்தின் வறுமையாலும்
இன்று என் பொன்மகள்
அந்நியனிடம் விலைபோய்
புகை படியும் தொழிற்சாலையாய்
மாறிப் போன அவலம்
என்னவென்று சொல்வேன்?
இன்று தீரும் என் பஞ்சம்
என்று காத்திருந்தேன்
ஆனால் என் மகளை காப்பாற்ற முடியாத
என் உயிர் எப்போது போகும் என்று
வயல் மகளே!
உன்னிடமே வரம் கேட்கிறேன்.......