உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

நித்தம் பல பல தடைகளை தாண்டி
சித்தம் முழுதும் உழைப்பே நினைவாய்
பலரின் வயிற்றை நிரப்ப உழைத்து
தன்னுடைய வயிற்றை கனவில் நிரைத்து
வேர்வை அறியாமல் சுகமாய் வாழும்
சோம்பல் மக்களை கண்முன் கண்டு
உலகை ஆள அதிகாரம் இருந்தும்
ஒரு நாள் வாழ தவியாய் தவிக்கும்
பணம் பன்னும் உலகின் பிடியில் சிக்கிய
மரணத்தின் விளிம்பில் இருக்கும் உழவனுக்கு
அடிப்படை தேவையும் அனைத்து உரிமையும்
நிலையான ஊதியமும் நிம்மதி தூக்கமும்
உரிய மதிப்புமும் உன்னத வாழ்வும்
குறைவின்றி கிடைக்கும் வரை
யாம் வேறு என்ன சொல்ல??
”உழைப்பும் இனி மெல்ல சாகும்”

எழுதியவர் : Ashok (9-Jan-13, 5:17 pm)
பார்வை : 99

மேலே