தைபிறப்பு மறு பதிப்பு
ஆண்டு தோறும்
பிறக்கும் தை மகளே !
நீ பிறந்தால்
வழி பிறக்கும் - என்பார்கள்
ஆனால் !
அது யாருக்கு ?
அது உழவர்களுக்கும்
உழவு தொழிலுக்கும்
உன்னத நாளாக
இருந்தால் சரி !
மற்றபடி!
நீ பிறக்கும் போது
பலருக்கு விழி பிதுங்குகிறது !
வெள்ளையடித்து வெளியேற
ஒரு நாள் செலவு
ஒரு மாத சம்பளமாகிறது !
கரும்பு இனிக்கிறது
கரும்பு விலை கசக்கிறது !
கிழங்கு வகைகள்
கேட்கவே வேண்டாம்
கிறங்க செய்கிறது !
இலை போட்டு
சாப்பிட ஆசைதான் ஏழைக்கும்
ஆனால் ஏளனமாக பார்க்கிறது !
இதை எல்லாம் கடந்து
பொங்கலிட்டு குழையடித்து
காக்கைக்கு உணவளிக்க
மாடிக்கு சென்றால்
கேட்கவே வேண்டாம்
அதுகளுக்கு அன்று இருக்கும் கர்வம் !!
எது எப்படியோ !
தை மாதம்
அனைவருக்கும் வழிபிறக்க
பொங்கலிட்டு போற்றி
சூரியனை வணங்கி
தை மகளையும்
போற்றுவோம் !
"தை பிறப்புக்காக"

