இது என்ன பூ*******......

நீரில் நிலம் ஊன்றி
நிமிர்ந்து மிதந்து தவழ்ந்து
நெருப்பிற்காக காத்திருக்கும்
தாமரை பூ...
அந்தி வேளையில்
அழகாய் மனதிற்கு ஓர் இதமாய்
அன்பான நிலவிற்காக காத்திருக்கும்
அல்லி பூ..
பாரிவேந்தனின் பார்வையாலே
பாரினில் புகழ் சூடி புன்னகையோடும்
கர்வத்தோடும் கண்சிமிட்டும்
முல்லை பூ..
கொடியிலே கோடி கால்கள் கொண்டு
கொப்பாக மலர்ந்து
கொண்டாட்டம் பூண்டு
கொடி இடையாளின் கூந்தலில்
குதூகலிக்கும்
மல்லிகை பூ...
முள்ளோடு வளர்ந்து
முன்னெச்செறிக்கையாய் முறைத்து- பறிக்க
முயன்றால் முட்டி விடும்,இருப்பினும்
முனைப்புடன் காதலர்கள்
முக்கியத்துவம் கொடுக்கும்
ரோஜா பூ.....
சூரியனை சுற்றியே
சுற்றுப்பாதை அமைத்து
சுருங்கினால் சுவையான உணவை
சுவைக்க வைக்கும்
சூரியகாந்தி பூ....
குன்றுகளிலும், குதித்தோடும்
நீர் வீழ்ச்சிகளின் அருகிலும்
நிரந்தரமாய் வசிக்கும்-பார்க்க
பன்னிரண்டு வருடங்கள் காக்கவைக்கும்
குறிஞ்சி பூ....
ஐந்திதழல்களால் வளைந்து விரிந்து
அமைதியாக பூஜையில் அமர்ந்து
ஐங்கரனிடம் ஐக்கியமாகும்
செக்கசிவந்த செம்பருத்தி பூ...
வண்ணத்தில் வனப்பும்
வாசத்தில் வசியமும்
விதையில் ஏனோ வஞ்சகமும்
வைத்திருக்கும் அரளி பூ.....
சிறியதொரு செடியில்
சிறப்பாய் சிட்டாய்
சிறியதொரு மேனி கொண்டு
சிற்றிதழல்களால் சிரித்து நிற்கும்
செவ்வந்தி பூ....
பல வண்ணங்களில் பகட்டாய்
அறியாததொரு வாசத்தை
அதனிடத்தே கொண்டு காட்சியளிக்கும்
கண்களுக்கு விருந்தளிக்கும்
கனகாம்பரம் பூ..
எல்லா பூக்களும்
பூலோகத்திலே பூத்துகிடக்க
பூவையின் நெஞ்சம் சூட
ஆசைப்படும் ஒரே பூ....!!!!
எண்ணியதை எழுதி
எழுத எழுத்திற்கு ஓடி வரும்
அனைவரும் சூடும் ஒரே பூ
எழுத்துவில் பூத்திருக்கும்
இந்த பூ
அது என்ன பூ....????
-PRIYA