பொங்கல் பண்டிகை

எத்தனையோ பண்டிகை வந்தாலும்
பொங்கல் பண்டிகை போல் - மனசுக்கு
உற்சாகம் தரும் பண்டிகை - வேற
எதுவும் உண்டா இவ்வுலகில் .!

மார்கழி பொறந்தவுடனே பனி
கூட தெரியாமல் விடியற்காலை
எழுந்து வாசல் தெளித்து - புது
புதுக் கோலமிடுகின்றோம்....

நல்ல நேரம் பார்த்து - வாசலில்
அடுப்பு வெட்டி பொங்கல் வைத்து
சூரிய பகவானுக்கு - பாசத்தோடு
படையலிட்டு கொண்டாடுகின்றோம்.!

தை பிறந்தால் வழி பிறக்கும் - என்ற
நம்பிக்கையில் - உழவர்களை
போற்றும் வகையில் - பசுக்களை
தெய்வமாக வணங்கி மாட்டு பொங்கல்
என்று கொண்டாடுகின்றோம்...!

சிறியவன் பெரியவர் என்று
பாராமல் அணைவரும் ஒன்றாய்
கூடி விளையாட்டுகள் நடத்தி
பரிசுகள் வழங்கி மகிழ்ச்சியோடு
கொண்டாடுகின்றோம் பொங்கல்
பண்டிகையை..!

எழுதியவர் : ரீகன் . க (13-Jan-13, 7:32 pm)
சேர்த்தது : AK Reegan
பார்வை : 440

மேலே