பொங்கலோ பொங்கல்... பொங்கட்டும் பொங்கல்....

புதுப்பானையில்
புத்தரசி போட்டு
பொங்கட்டும் பொங்கல்
பொங்கட்டும்......

அதனோடு சேர்ந்து
அன்பும் பெருகிட பொங்கட்டும்..!!!!
அருளும் வளர்த்திட பொங்கட்டும்..!!!!!
ஆசையெல்லாம் நிறைவேறிட பொங்கட்டும்...!!!
இக்கட்டான தருணங்கள்
இளகி விலகி ஓட பொங்கட்டும்....!!!!!!
ஈகை மனம்
உயர்ந்திட பொங்கட்டும்...!!!!!!
ஊரெல்லாம் மும்மாரி மழை பொழிய பொங்கட்டும்.....!!!!!!
என்றும் வயல்காட்டில்
ஏற்றமே கொண்டு தானியம் தழைத்திட பொங்கட்டும்....!!!!!!!
ஒற்றுமையாய் வாழ்ந்திட பொங்கட்டும்...!!!!
ஓசையுடன் உரைத்திடுவோம்- நாம்
பொங்கலோ பொங்கல்.......
பொங்கலோ பொங்கல்......

எழுத்து.காம் அறிமுகப்படுத்திய அன்பான உறவுகள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்......

-PRIYA

எழுதியவர் : PRIYA (14-Jan-13, 2:51 am)
பார்வை : 117

மேலே