பாதம் தொட்டு வணங்குங்கள்.....
வாழ்ந்து,முதிர்ந்து பக்குவம் அடைந்து
வாழ்ந்த நாட்களை எண்ணி
வாழ்ந்துகொண்டிருக்கும்-முகத்தின்
வரிகோடுகளுக்குள் ஒழிந்திருக்கும்
வந்து போன இளமை காலங்களை
நமக்கொரு காட்சியாக
நல்லதொரு சாட்சியாக
நம் வீட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
வயோதிகர்களின் வாயாலே
நல்லதொரு திருநாளிலே
வாழ்த்து பெறுங்கள்....
பாதம் தொட்டு வணங்குங்கள்..
ஆசிர்வாதம் பெறுங்கள்
இவ்வாசிர்வாதம் பிடிவாதமான
ஆசைகளையும் அண்டி வரச்செய்யும்
அகிலத்திற்கு அறிமுகப்படுத்திய
அம்மை , அப்பன் அண்டசராசரத்தில்
நமது அருகில் இருக்கும் தெய்வங்கள்
அவர்களின்
பாதம் தொட்டு வணங்குங்கள்
பல நூறாண்டு வாழவே வாழ்த்துவார்கள்
அந்த வாழ்த்து பல முறை
புண்ணியதலம் சென்றாலும் கிடைத்துவிடாது
-PRIYA