வந்து விட்டாள் (அத)தைமகள்
![](https://eluthu.com/images/loading.gif)
தை மகளின் வரவை எண்ணிக்
காத்திருந்த காலம் போய்த்
தை மகளும் வந்து விட்டாள் ,என்
(அத)தை மகளும் வந்து விட்டாள்!
உள்ளத்தில் பொங்கிடும்
உற்சாக நினைவோடு
வெல்லமாய் இனிக்கின்ற
பொங்கலும் கரும்பும் கொண்டு,
இனிமையாய் ஒரு
இயற்கை வழிபாட்டில்
மனதைப் பறிகொடுத்தேன்
(அத)தை மகளிடம்தான்!
எனக்குள்ளே தோன்றிய
எண்ணங்களை சரம் தொடுத்து
'எழுத்துக்கும்' சொந்தங்களுக்கும்
நல்வாழ்த்து நான்சொன்னேன்
நலமுடனே ஏற்றுக் கொள்வீர்!
நிறைய நிறைய
அன்புடன்
ஆனந்த்