மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல்:
பட்டாடை கட்டி...
மஞ்சள் குங்குமப்பொட்டு வச்சு...
கால்ல சலங்கை போட்டு பசுமாடெல்லாம் ரெடியாயாச்சு...
உடம்பெல்லாம் வண்ணம் பூசி கொம்புக்கெல்லாம் கலர்கலரா பெயிண்ட்டடிச்சி காளை மாடுகளும் கலக்குதுங்க...
வருசமெல்லாம் "மாடா" உழைக்கிற அந்த வாயில்லா ஜீவன்களுக்கு...
இன்று ஒரு நாள் லீவு விட்டு...
அதுங்களை கடவுளா கும்பிட்டு...
விருந்து சாப்பாடு போட்டு...
அதுங்கள வியக்க வைக்குறாங்க...
பாசமா கொஞ்சி
'மிருகநேயம்' காட்டுறாங்க...
கிராமத்துலலாம் இப்படினா...
நகரத்துல வழக்கம்போல ஒரு விடுமுறை நாள் அவ்ளோதாங்க...
நணபர்களுக்கு "உன்னோட பொங்கல் வாழத்துக்கள்"னு SMS அனுப்பி கலாய்ச்சு...
டிவியில சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்து...
ஜல்லிக்கட்ட நியூஸ்ல பாரத்து...
பொழுதுபோக்குறாங்க...
நாடு போற நிலமைல...
பெட்ரோல், டீசல்லாம் போட முடியாம...
நாமளும் 'கால்நடை'யாத்தாங்க
மாறப்போறோம்...

இனிய மாட்டுப்பொங்கல் வாழத்துக்கள்...
மற்றும்..
ADVANCE 'கால்நடை'ப் பொங்கல் வாழத்துக்கள்
(இது அடுத்த வருசத்துக்குங்க)...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (16-Jan-13, 1:24 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 486

மேலே