தைப்பொங்கல்:

காவிரிக்காக காத்திருந்து பயிரெல்லாம் காய்ந்து போச்சு..!
கரண்ட்டுக்காக காத்திருந்து மிஷினெல்லாம்
தூசியாச்சு..!
என்னடா பொங்கல்னு களத்துமேட்டு குப்பனும்
கம்ப்யூட்டர் கிப்ஸனும்
ஒன்னு போல புலம்புறாங்க..!
இருந்தாலும் கடன உடன வாஙகி..!
டாஸ்மாக்ல கட்டிங் விட்டு அதை மறக்குறாங்க!
இந்த வருசம் இப்பிடி போச்சி..!
அடுத்த வருசமாச்சும்
நலல அமையனும்னு
கொணடாடும் விழாவாக இல்லாம..!
ஆண்டின் தொடக்க விழா பூஜையாக கடவுளை வேணடுறாங்க..!

நாமும் பிரார்த்திப்போம்!
நம் வாழ்வு முன்னேறவும்!
நாடு முன்னேறவும்!

தை பிறந்தது..!
வழி பிறக்கட்டும்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே..!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (16-Jan-13, 1:32 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 80

மேலே