காதலிப்போம்...

காதலும் வேண்டாம்
அதற்காய்
நோதலும் வேண்டாம்...

காதலின்றேல்
சாதலென்ற
போதனையும் வேண்டாம்...

ஆணுக்காய்
பெண்ணுக்காய்
அலைந்திடலும் வேண்டாம்...

பெற்றவரும்
உற்றவரும்
அற்புதமாய் அழும் வகையில்
நிலைகுலைவும்
தலைமறைவும் வேண்டாம்...

எம் பெற்றோர்கள்
மூடிவைத்த மானம்
மாடிவழி போனதென்ற
ஊர்ப்பேச்சும் வேண்டாம்...

காதலித்த பாவத்தால்
சேராமல் இறந்துவிட்ட
காதலர்களுக்கு
நேர்ந்த கதி
சத்தியமாய் வேண்டாம்...

காணுகின்ற
கனவிலும்
கண்ணாளன் நினைவாக
கலங்குதலும் வேண்டாம்...

காதலினால்
மோதலூன்றி
உலகமெல்லாம் பரவிவிடும்
இழிநிலையும் வேண்டாம்...

ஆதிச்சொந்தம்
அறுத்துவிட்டு
பாதியோடு ஓடியதாய்
சேதிகளும் வேண்டாம்...

காதலித்த
சாதனைக்காய்
வேதனையால் வேகும் நிலை
இத்தரையில் வேண்டும்...

கண்ணில்லாக் காதலாலே
வீடுவிட்டுத் துரத்தியதால்
காடு சென்று
மாண்டதாக
சோகங்களும் வேண்டாம்...

காதலித்தால் காதலிப்போம்
கரம் பிடித்த பின்
கணவனைக் காதலிப்போம்
மணம் முடித்த பின்
மனைவியைக் காதலிப்போம்...

எழுதியவர் : (17-Jan-13, 9:55 pm)
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே