அன்பு அம்மா......

எனை பத்து மாதம் கருவிலே சுமந்து பெற்றெடுத்த
அன்புத் தாயின் அறுபது ஆவது
பிறந்த தினம் இன்று

அம்மா உனை வாழத்த வயதில்லை எனக்கு
இருந்தாலும்.வாழ்த்துகின்றேன்
பல்லாண்டு காலம் அம்மா நீ
வாழ வேண்டும் வாழ வேண்டும்....

என்ன பாவம் செய்தேனா
அம்மா உனை
பிரிந்து அன்னிய நாடான்றில் இன்று நான்
விரும்பிய உணவை விரும்பிய நேரம் எல்லாம்
சமைத்து தருவாயே
அம்மா
இன்று விரும்பாததை விரும்பி
உண்ணும் நிலையில் நான்,

உணவை எடுத்து மேசையில் வைத்து
தம்பி சாப்பிட வா என்பாய்,
இப்போ பசிக்க வில்லை என த ட்டிக் கழித்தேன்,
தட்டிக் கழித்த நாட்களை எண்ணி
கண் கலங்குகின்றேன் இன்று,,

அன்போடு சாப்பிட்டாயா என்று கேட்பதற்கு கூட
யாரும் இல்லை என்னருகில் இன்று,
அன்பு அம்மா நீ அருகில் இருக்கும் வரை
தெரியவில்லை உனது அருமை - இன்று
ஒவ்வொரு வினாடியும் உணர்கின்றேன்
உனது அருமையை.....

தினம் வேண்டுகிறேன் கடவுளிடம்
அம்மா உன் கையால் சமைத்து நீ
எனக்கு தரவேண்டும்
உன் மடியில் தலை வைத்து நான் படுக்க
அன்புடன் நீ தலை கோதி விட - நான்
உறங்க வேண்டும்
எதிர்பார்புடன் ஏங்கி
தவிக்கின்றேன் அம்மா
இந்த நாளை எண்ணி....

எழுதியவர் : (18-Jan-13, 2:45 am)
Tanglish : anbu amma
பார்வை : 118

மேலே