எனக்கு வேறு கனவுகள்....
உனது நதி....
என் தாகம்
தீர்ப்பதற்கில்லை...
என் சந்தைப் பொருள்
உனக்கு விற்பதற்கல்ல.
நானும்...நீயும்
வேறு..வேறு...என்பது
இப்போது..பெயரில் மட்டுமல்ல.
***********************************************.
வானம் சுருங்கிக்
கூடாகிக் கொண்டிருக்கிறது..
என் மேல்...
தாவணி முளைத்த நாளிலிருந்து.
***************************************************
நான்
உன்னைத்தான் எழுதுகிறேன்.
நீ...
என்னைப் படிப்பதாய் நினைக்கிறாய்.
ஒத்துப்போவதில்லை...
நமது வாசிப்புகள்.
********************************************************
நீ
எனக்கு
உயிர் நண்பனாகி விடுகிறாய்...
உணவு விடுதியில்...
நாம் சாப்பிட்டதற்கான பணத்தை
நீ செலுத்திய பிறகு.
**********************************************************
என் கனவுகள்...
சோம்பேறித்தனமானவை...
ஒரு எறும்பு
தூங்குவது போல்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன் நான்.
***************************************************************