...........அரிதாரம்...........
காத்திருந்த கணங்கள் தொடர்ந்ததில்,
வியர்த்துக்கிடந்தது முகம் !
துடித்தபடியே தவித்திருந்தேன் பதட்டத்துடன் !!
உன் வரவுக்காக வழிகிடந்து வரவுக்காக !
நீ மட்டும் எப்படி ?
முழு வசீகரத்துடன் என் முன்னே ?
எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்கேயோ மறைத்துக்கொண்டு ?
இதயம் கொண்டாடும் இயல்பு மலராய் !!