............போகும் வழி.........
யார் போன வழியிலும் நான் போகவில்லை !
வழி தெரியாமலும் நின்று திகைக்கவில்லை !
முள்ளையும் மலரையும் சரிவிகிதத்தில் நேசிகிறேன் !
எங்கு எதுகிடைத்தாலும் தின்று இளைப்பாறி கிளம்புகிறேன் !
இலக்கை எதிர்பார்த்தல்ல இந்த தொடர் பயணம் !
முடிந்தவரை முயலலாம் எதையேனும் என்றொரு எண்ணம் !
எனவே நான் மடிந்துபோகும் இடமே சென்றடைந்த இலக்கு !!